Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2008

                பதிவர் திரு. சென்னை வந்துள்ளார்! ஞாயிறு மாலை 6=30 அளவில் புத்தகப்பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது…

                விடுமுறை நாள், புத்தகப்பூங்கா. பொங்கல்கொள்முதல் கூட்டங்களால், பேருந்தில் இடம் பிடிப்பது இயலாததாகிவிட்டது;இருசக்கர வாகனத்தில் அவ்வளவு தூரம் பயணிப்பதும் இயலாது. எனவே பயணத்தைக் கைவிட்டேன்..அலைபேசியில் பாலாவைத் தொடர்புகொள்ள முயன்றால், அது தொடர்ந்து உபயோகத்தில் இருந்தது. லக்கியாரின் தொலைபேசி கூறிய பதிவுசெய்யபட்ட பதிலை புரிந்துகொள்ளவே முடியவில்லை….

                நாகேஸ்வரர் பூங்காவில் நடைபெறும் சங்கமத்திற்கு செல்ல முடிவு செய்தேன். நாட்டிய நிகழ்ச்சி. நான் பார்த்த நாட்டியங்கள் யாவும் பாரதியார் பாடல்களாகவே இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது

                மனப்பாறைமுறுக்கு, சாத்தூர் சேவு, திருநெல்வேலி அல்வா என்று பாரம்பரிய சிற்றுண்டிகள் விற்பனைக்குக் கடைதிறந்திருந்தனர். ஆனால் கிராமியசிற்றுண்டிகள் யாவும் 51/2 மணிக்கே விற்றுத்தீர்ந்துவிட்டன..

                சன்நியூஸ் நிஜம் நிகழ்ச்சி 9=30க்குத் துவங்கியது. மா.சிவக்குமார்,பத்ரி,கிருஷ்ணகுமார், பூர்ணா ஆகிய பதிவாளர்களும்,எஸ்.ராமகிருஷ்ணன்,சீனிவாசன் ஆகிய எழுத்தாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். புதுவிபரங்கள் சில அறியக்கிடைத்தன…

                நிகழ்ச்சி முடிந்ததும் இரண்டு சந்தேகங்கள்:

                 கிருஷ்ணகுமார் எனும் அரசியல்வலைப் பதிவருக்கும் லக்கிலுக்கிற்கும் ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கே! ஒருவேளை கிருஷ்ணகுமார்தான் லக்கிலுக்கா? அல்லது லக்கிலுக்தான் கிருஷ்ணகுமாரா?

                 பூரணா புதரகம் சென்றிருப்பதாகச் சொன்னார்களே! இந்தியா திரும்பிவிட்டாரா?

                 வலையுலக நண்பர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன்

                  அந்த நண்பர்,”இந்த நேரத்தில இது பெரிய சந்தேகமா?நல்லவேளை ‘தல’யக் காட்டலே.. நிம்மதியாத்தூங்குங்க”என்றார்.

                   “ஏன்”என்றேன்

                   அவர் சொன்னார்,”அப்புறம் பயத்தில தூக்கமே வராது சார்.”

                    ஆவிகளை வைத்துக் கதை எழுதும் அவருக்கே அவ்வளவு பயமா?

Read Full Post »