Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

ஆவிக்கதைகள் எழுதி நம்மை பயமுறுத்திக்கொண்டிருந்தவர் வினையூக்கி(ஆர்.செல்வகுமார்)

நாளை- புதன் நள்ளிரவில் அவர் ஸ்வீடனுக்குக் கல்விப்பயணம்
மேற்கொள்கின்றார். அங்கு ப்ளெகிங் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில்
மேற்படிப்பை மேற்கொள்வார்
நண்பரின் கல்விப்பயணம் இனியதாகவும், வெற்றிகரமாகவும்
அமைய வாழ்த்துகின்றேன்

yes…pls…welcome! னு சொன்னா தப்பா?

அதுக்குனு ஒரு கூட்டமே கருப்புக்கொடி தூக்கப்போவுது, சென்னையில்!

மார்ச் 30,மாலை மெரினா காந்திசிலை அருகெ மொக்கைசந்திப்பு என்பது அறிந்ததே!

அதற்கான அறிவிப்பில் பதிவரின் சந்தேகத்திற்குப் பதில் சொன்ன மொக்கைத்தலை,”yes…pls… welcome”னு இங்கிலீஷில் பதில் சொன்னதாம்

இதனால் ஆத்திரப்பட்ட தமிழ்நாடு ஆங்கில இலக்கிய மாணவர் அணியின் நிர்வாகக்குசுழு கீழ்க்காணும் திரமானத்தை நிறைவேற்றி உள்ளது

மொக்கைத்தலை தொடர்ந்து ஆங்கிலத்தை அவமதிப்பதைக் கண்டிக்கும் வகையில், மொக்கைசந்திப்பின்பொழுது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

குசும்பன், அபி அப்பா வருகையின் பொழுது அசம்பாவிதம் ஏற்படுவதை பலர் விரும்பவில்லை

கோபமாயிருக்கும் திண்டுக்கல் பதிவரும், பேய்க்கதைமன்னரும் சமரசமுயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

பிரச்சினையை ஊதிவிட்ட சிகப்புநெருப்பு தேனிலவிற்கு ஸ்வீடன் கிளம்பிவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெனியும் ரம்யாவும் அறிவிக்கிறனர்!

தாவு தீர்ந்தாலும் டவுசர் கிழிஞ்சாலும் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெறும் என்று மடிப்பாக்கம் தகர நெடுநா வாயன் சவால் விட்டுள்ளார்!

கிறைஸ்ட்சர்ச் நகரத்தின் புகழ்பெற்ற ஹாஸ்பிட்டல்.காதலர்தினத்தின் நள்ளிரவு தாண்டி விடிகாலை நேரம்.பணியாளர்கள் ஸ்ட்ரெச்சர்வண்டியை பரபரப்புடன் தள்ளிக் கொண்டுவந்தனர்.

ஸ்ட்ரெச்சரின் ஒருபுறம், கண்கலங்கியபடி பதட்டத்துடன்,பின்னூட்ட நாயகி,

வலையுலக டீச்சர்,

துளசி கோபால்!

மறுபுறம்-

மிஸ்டர்.கோபால்,பதட்டமாக!

ஸ்ட்ரெச்சரில் பதவிசாய் கண்மூடி படுத்திருப்பது, ஜிகே!

“என்ன ஆச்சுங்க டீச்சர்?”-பதைபதைப்புடன் கேட்டேன்.

“செத்த இருங்க வர்றேன்” என்றபடி, ஜிகேயுடனும் கோபாலுடனும்டாக்டரின் அறைக்குள் புகுந்தார்.சிறிது நேரத்தில் சிகிச்சைஅறைக்கு ஜிகே மாற்றப்பட மூடியகதவுகளை வெறித்தபடி இருவரும் நின்றனர்.சிப்பந்திகள் வெளியே வரும் ஒவ்வொரு முறையும் இருவரும் சிப்பந்திகளிடம் ஏதோ கேட்க, அவர்களோ ‘உஷ்’ என்றபடி நகர்ந்துகொண்டே இருந்தனர்.“என்னங்க ஆச்சு?”-நான் கேட்டேன்.“..ஸ்ஸ்ஸ்…என்ன ஆச்சு? எல்லாம் இந்த அம்மா கொடுக்கிற செல்லம்”- கோபால் வெடித்தார்.

“என்ன?என்மேலே என்ன தப்பு? எல்லாம் உங்களைப்போல்தானே….”அங்கே ஒரு போர்க்களம் உருவாகும் போலிருந்தது

நல்லவேளை! டாக்டர் வெளியே வந்தார்.

” டோண்ட் வொர்ரி…நல்லவேளை! கண்ணு தப்பிச்சது கடவுள் கருணை!

ஆண்ட்டிபயாடிக்ஸ் போட்டிருக்கேன்…தினம் ஊசி போடனும்…ஒரு நாலுநாள்

ஜுரமடிக்கும்…”டாக்டர் நகர்ந்துகொண்டே சொன்னார்.

“என்ன ஆச்சு?”- மீண்டும் நான்.

“ஒன்னுமில்லீங்க! வாலெண்டைன் டே அன்னிக்கு இரவில் கொஞ்சம் ரோமியோ வேஷத்தில் வெளியே போயிட்டு அடிவாங்கி

வந்திருக்கான்” வேதனையோடு டீச்சர் சொன்னாங்க.

குபீரென்று சிரித்தேன் நான்!

                பதிவர் திரு. சென்னை வந்துள்ளார்! ஞாயிறு மாலை 6=30 அளவில் புத்தகப்பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது…

                விடுமுறை நாள், புத்தகப்பூங்கா. பொங்கல்கொள்முதல் கூட்டங்களால், பேருந்தில் இடம் பிடிப்பது இயலாததாகிவிட்டது;இருசக்கர வாகனத்தில் அவ்வளவு தூரம் பயணிப்பதும் இயலாது. எனவே பயணத்தைக் கைவிட்டேன்..அலைபேசியில் பாலாவைத் தொடர்புகொள்ள முயன்றால், அது தொடர்ந்து உபயோகத்தில் இருந்தது. லக்கியாரின் தொலைபேசி கூறிய பதிவுசெய்யபட்ட பதிலை புரிந்துகொள்ளவே முடியவில்லை….

                நாகேஸ்வரர் பூங்காவில் நடைபெறும் சங்கமத்திற்கு செல்ல முடிவு செய்தேன். நாட்டிய நிகழ்ச்சி. நான் பார்த்த நாட்டியங்கள் யாவும் பாரதியார் பாடல்களாகவே இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது

                மனப்பாறைமுறுக்கு, சாத்தூர் சேவு, திருநெல்வேலி அல்வா என்று பாரம்பரிய சிற்றுண்டிகள் விற்பனைக்குக் கடைதிறந்திருந்தனர். ஆனால் கிராமியசிற்றுண்டிகள் யாவும் 51/2 மணிக்கே விற்றுத்தீர்ந்துவிட்டன..

                சன்நியூஸ் நிஜம் நிகழ்ச்சி 9=30க்குத் துவங்கியது. மா.சிவக்குமார்,பத்ரி,கிருஷ்ணகுமார், பூர்ணா ஆகிய பதிவாளர்களும்,எஸ்.ராமகிருஷ்ணன்,சீனிவாசன் ஆகிய எழுத்தாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். புதுவிபரங்கள் சில அறியக்கிடைத்தன…

                நிகழ்ச்சி முடிந்ததும் இரண்டு சந்தேகங்கள்:

                 கிருஷ்ணகுமார் எனும் அரசியல்வலைப் பதிவருக்கும் லக்கிலுக்கிற்கும் ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கே! ஒருவேளை கிருஷ்ணகுமார்தான் லக்கிலுக்கா? அல்லது லக்கிலுக்தான் கிருஷ்ணகுமாரா?

                 பூரணா புதரகம் சென்றிருப்பதாகச் சொன்னார்களே! இந்தியா திரும்பிவிட்டாரா?

                 வலையுலக நண்பர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன்

                  அந்த நண்பர்,”இந்த நேரத்தில இது பெரிய சந்தேகமா?நல்லவேளை ‘தல’யக் காட்டலே.. நிம்மதியாத்தூங்குங்க”என்றார்.

                   “ஏன்”என்றேன்

                   அவர் சொன்னார்,”அப்புறம் பயத்தில தூக்கமே வராது சார்.”

                    ஆவிகளை வைத்துக் கதை எழுதும் அவருக்கே அவ்வளவு பயமா?

                திடீர் வலைப்பதிவர்கள் சந்திக்கலாம் இன்றுமாலை 6-30 மணியளவில், காந்திசிலை அருகே என்று லக்கிலுக் அறிவித்தார்!

                 ஒரு வருஷமா பதிவு போட்டாலும் 50 பதிவுகள்தாமே போட்டிருப்போம்….நாம திடீர் வலைப்பதிவாளர் லிஸ்ட்லே வருவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது!

                 சரி! லக்கியாரையே கேட்டிடுவோம் என்று அவருக்கு டயல் செய்தேன்.

                “கண்ணாமூச்சி ரே..ரே.. காட்டுமூச்சி ரே..ரே  “என்று ரிங்டோன் கேட்டதுதான் மிச்சம்.                                                              

                பாலாவுக்குப் போட்டேன். அவர் செல்போனில் “வேணும்…கல்யாணம்….சந்தோஷமாகவே…”என்ற பாட்டு!

                போதும்டா சாமீ னு பொடிநடையாக் கிளம்பினேன், மெரினா நோக்கி…..

                காந்திசிலையை ஒருமுறை பிரதட்சனம் வந்தேன்….பிறகு ஒருமுறை அப்பிரதட்சனமாக வந்தேன். ம் ஹூம் நம்மாளுக கண்ணில் படவேயில்லையே…

                சிறிது நேரத்தில் லக்கியார் வந்து, ‘நாங்க அங்கேல்ல இருக்கோம்…வாங்க..’ என்று அழைத்துச் சென்றார்!

                அங்கே…

                 ஓசைசெல்லாவும் அதியமானும் சீரியஸ் டிஸ்கஷனில் இருந்தனர்…

                  லக்கியாரின் போனில் பாலா வந்தார். வழக்கப்படி வழியைத்தவறவிட்டுவிட்டதாக புலம்பல்!ஆழியூரானும் அவரோடு அகப்பட்டுக்கொண்டார்…லக்கியாரும் அதியமானும் மீட்புப்படையாக அவரைத் தேடிச் சென்றனர்…

                ம்மாட்டிக்கிட்டோம்னு பயந்துகொண்டே செல்லாவைப் பார்த்தேன்…

                நல்ல வேளை! ஓசையின் போன் ஓசையிட்டது.

                போனில் பேசிய செல்லா என்னிடம் “உங்களுக்கு ராசி ஏழுமலையைத்தெரியுமா” என்றார். “தெரியாதே” என்றேன்.

                 சரி! காசி ஆறுமுகம் பேசுறார், பேசுங்க என்றார்.”எனக்கு செல்போனில் பேசமுடியாதே” என்றேன்.

                பிறகு காசி ஆறுமுகம் பேசுவதை செல்லா கேட்டு என்னிடம் சொல்ல நான் அவரிடம் நேரிடையாக பதில் சொல்ல……இப்படி சில நிமிடங்கள்…

                மா.சிவகுமாரும், வினையூக்கியும் வந்து சேர்ந்தனர்..

                மீட்பு அணியும் பாலபாரதியையும் ஆழியூரானையும் அழைத்து வந்தது..

                சூடான விவாதங்கள் தொடங்கின. விவாதிக்கப்பட்ட தலைப்புகள்:-

                தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டியதன் அவசியம்;

                குஜராத் தேர்தல் முடிவு;

                டெக்னிகல் விஷயங்கள் பல(எனக்குப் புரியாது…விட்டுவிட்டேன்)

                 விவாதத்திற்கு நடு நடுவே கிடைத்தவை:-                 சூடான கடலை(சாப்பிடும் கடலை)

                  சூடான பஜ்ஜியும் பொதினா சட்னியும்

                 போளி

                  கைமுறுக்கு

                  சுக்குக்காபி.

                  ஒருவர் போண்டா இல்லையா என்றார்! போளி இருப்பதால் போண்டா இல்லை என்றார் மற்றொருவர்!

                 9 மணி ரயிலைப்பிடிக்க 8-20 க்கு ஓசை செல்லா கிளம்பினார். மற்றவர்கள் 8-45 வரையில் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்!

                 சொல்ல மறந்த செய்தி:- ஆழியூரான் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார்!

                  தருமமிகு சென்னை அவரை வரவேற்கின்றது!

இன்று

புதுச்சேரியில்

நடைபெறவிருக்கும்

வலைப்பதிவர் பட்டறை

வெற்றிபெற

வாழ்த்துகின்றேன்!

               ஞாயிறு விடுமுறை நாள். நல்லவேளை, முதல்வாரம் என்பதால் கூட்டம் குறைவு. பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு வசதியாகத் தக்க ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது.

                 கலந்துகொண்ட பதிவர்கள்:                             

                 நெல்லையிலிருந்து  ஆழியூரான்  

                 பெண்களூரிலிருந்து இள்வஞ்சி

                 லிவிங்ஸ்மைல் வித்யா

                 தல பாலபாரதி

                 சின்னதல லக்கிலுக்

                 மரக்காணம் பாலா

                 நந்தா

                 முரளி கண்ணன்

                 ஊற்று

                 தமிழ்குரல்

                 பைத்தியக்காரன்

                 எம்.பி.சுந்தர்

                  சிவராமன்

                 லெனின்/பூக்குட்டி

                 தமிழினியன்

                 மிதக்கும்வெளி சுகுனாதிவாகர்

                 சிவஞானம்ஜி

                 ஞாநியின் ஓலம் பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது

                 ஊற்று புதுச்சேரி பட்டறை பற்றி சில விபரங்களை அளித்தார்

                முதலில் நெய்முறுக்கும்,சிறிது நேரம் கழித்து  தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும் வினியோகம் செய்யப்பட்டது

                  சென்னைவாசியான பிறகு வித்யா கலந்துகொள்ளும் முதல் சந்திப்பு இது. பதிவர் பட்டறையின் பொழுது காணப்பட்டதைவிட தெளிவாக நிம்மதியாக இருப்பதை அவர் முகம் காட்டியது. அவருடைய இலட்சியத்தில் அவர் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிகின்றது. வாழ்க;வெல்க!

              பாலபாரதி சதை போட்டிருக்கின்றார்! அவர் பணிபுரிவதாகக் கூறிக்கொள்ளும் புதிய இடத்தில் பணிச்சுமை குறைவா? அல்லது அலுவலகத்தின் அருகே அளவில்லாத சாப்பாடு(unlimited meals) போடும் உண்வகம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.

               ஏழு மணி என்று அறிவித்திருந்தாலும் நண்பர்கள் குழுக்களாகப் பிரிந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.நான் 7-45 அளவில் விடைபெற்றேன்.நான் ஸ்கூட்டியில் சென்றிருந்ததால் “வீட்டிற்கு ஜாக்கிரதையாக சென்றதும் போன் செய்யுங்கள்”என்று பாலபாரதி சொன்னார்.

             வீட்டிற்கு வந்தவுடனேயே தொலைபேசியில் அழைத்து “என்ன எப்படி இருக்கிறீர்கள்” என்றேன்……..

              அனேகமாகக் காலையில் பதி கூறுவார்…..

                 தமிழக தமிழ்வலைப்பதிவர்களின் நல்லெண்ணத் தூதுவராக பொன்ஸ் எனும் பூரணா எனும் யானைத்தோழி அமெரிக்கா செல்கின்றார்.

                இன்று(08/09/07) இரவு அவர்  மீனம்பாக்கத்திலிருந்து புறப்படுகின்றார்.

                பய்ணம் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்! 

         

               1947  ஆகஸ்ட் 15!

                இரண்டாப்பு படிக்கையிலே

                இடுப்பு ட்ராயர் விழுந்திடாமெ

                இடக்கையால் பிடித்தபடி

                வலக்கையில் கொடியேந்தி

                வாழ்க வாழ்க கோஷமிட்டு

                ஊரெல்லாம் சுற்றிவந்து

                ஒருவரிசையா நின்றிருக்க

                பெப்பர்மிண்ட் கொடுக்கையிலே

                பாவிமக்கள் கலைஞ்சுபோக

                பளாரென்று விழுந்ததுவே

                சுதந்திரதினப் பரிசு!

வலைப்பதிவர் பட்டறை இன்று காலை 9.30 மணிக்கு இனிதே துவங்கியது. சுமார் 300 பதிவர்களும், வருங்கால பதிவர்களும், ஆர்வமிக்க மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். வலைப்பட்டறை வெற்றிகரமாக தொடர்கின்றது.

தமிழ்வலைப்பூ உலகில் இது ஒரு திருப்பு மையம் ஆகும்.