Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2007

               பாத்திமா பீவி ஷேக்!

               ஆந்திராவின் ராஜேந்திரநகரைச் சேர்ந்த பள்ளி மாணவி! சாப்ட்வேர் எஞ்சினியர் ஆகவேண்டுமென்ற ஒரே கனவுடன் வலம்வந்தவர்.ஆனால் 15 வயதிலேயே ஷேக்சாலர் எனும் உறவினருக்கு மணம் முடிக்கப்பட்டார்.

               தன் இளம்பருவக் கனவு சிதைந்து போவதைத் தன் கணவரிடம் வேதனையுடன் தெரிவித்தார், பாத்திமா. சாலர், “ஆகட்டும் பார்ப்போம்”என்று பெருந்தன்மையாகத் தலையசைத்தார்.

               ஷேக் சாலர்(26) நடைபாதை வியாபாரி. தான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவையும் தன் மனைவியின் கல்விக்காகச் செலவிட உறுதி பூண்டார்!அவர்கள் குடிசைபகுதி ஒன்றில் வசித்தனர்.மனைவி கல்லூரிக்குச் செல்வார்;கணவர் தள்ளுவண்டியில், மிளகாய்பஜ்ஜி,பானிபூரி,வறுத்த சோளம் போன்றவற்றை தெருக்களில் விற்று, நாளொன்றிற்கு ரூ.150 வரையில் சம்பாதிப்பார்.

               க்னவு நனவாகக் கடுமையாக உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, முதல் இரண்டு ஆண்டுகளுக்கான கல்லூரிக் கட்டணமான ரூ.60,000ஐச் செலுத்திவிட்டனர். மீதத்தொகையை ஆந்திரப்பிரதேச சிறுபான்மையினர் நிதி கார்ப்பொரேஷன் செலுத்தி உதவியது.

               “திருமணத்தின் பொழுது, தனது கல்விக்கனவை, அவள் எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது பற்றி எனக்கு அவ்வளவாகத்தெரியாது” என்று ஒப்புக்கொள்ளும் சாலர்,”ஆனால் எஸ்.எஸ்.சி தேர்வில் அவள் 536 எடுத்ததைப் பார்த்ததும்,எப்படியும் அவள் கனவை நிறைவேற்ற உறுதி பூண்டேன்”என்கின்றார்.

               பாத்திமா,”கடந்த 6 ஆண்டுகளில்,தனது ஆசைகளையெல்லாம் அவர் எனக்காகத் தியாகம் செய்தார்; என் பலமே அவர்தான்” என்கின்றார்.

                ‘நல்ல வேலை கிடைக்கும் வரையில் குழந்தைகள் வேண்டாம்’ என்று அவர்கள் முடிவு செய்ததற்காக, உறவினர்களிடமிருந்து அவர்களுக்குக் கிட்டியதெல்லாம் கிண்டலும் கேலியும்தாம்!

               கடும் உழைப்பினால் அவர்தம் கனவு பலித்தது!

               பொறியியல் பட்டப்படிப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்ற பாத்திமாவை இன்போஸிஸ் நிறுவனம் வரவேற்றுக்கொண்டது!

               பாத்திமாவின் தற்பொழுதைய வருத்தம் என்ன?

              ‘ பயிற்சிக்காக 6 மாத காலம் கணவரைப் பிரிந்திருக்க வேண்டுமே’ என்பதுதானாம்!

              “ஊழையும் உப்பக்கம் காண்பர்”என்பது இதுதானோ?

(ஆதாரம்: DECCAN CHRONICLE/CHENNAI/25-05-07.

Read Full Post »

இது ஒரு சோதனைப் பதிவு- எனக்கு!

உங்களைச் சோதிக்கும் பதிவுகள், இனி!

Read Full Post »

Test

இது ஒரு சோதனை முயற்சி!

Read Full Post »

பகையில்லாத உள்ளங்கள்;
பசியில்லாத இல்லங்கள்-
அகிலம் காணும் ஒரு காலம்;
அதுவே நமக்குப் பொற்காலம்!

அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துகள்!

Read Full Post »