Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2007

                திடீர் வலைப்பதிவர்கள் சந்திக்கலாம் இன்றுமாலை 6-30 மணியளவில், காந்திசிலை அருகே என்று லக்கிலுக் அறிவித்தார்!

                 ஒரு வருஷமா பதிவு போட்டாலும் 50 பதிவுகள்தாமே போட்டிருப்போம்….நாம திடீர் வலைப்பதிவாளர் லிஸ்ட்லே வருவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது!

                 சரி! லக்கியாரையே கேட்டிடுவோம் என்று அவருக்கு டயல் செய்தேன்.

                “கண்ணாமூச்சி ரே..ரே.. காட்டுமூச்சி ரே..ரே  “என்று ரிங்டோன் கேட்டதுதான் மிச்சம்.                                                              

                பாலாவுக்குப் போட்டேன். அவர் செல்போனில் “வேணும்…கல்யாணம்….சந்தோஷமாகவே…”என்ற பாட்டு!

                போதும்டா சாமீ னு பொடிநடையாக் கிளம்பினேன், மெரினா நோக்கி…..

                காந்திசிலையை ஒருமுறை பிரதட்சனம் வந்தேன்….பிறகு ஒருமுறை அப்பிரதட்சனமாக வந்தேன். ம் ஹூம் நம்மாளுக கண்ணில் படவேயில்லையே…

                சிறிது நேரத்தில் லக்கியார் வந்து, ‘நாங்க அங்கேல்ல இருக்கோம்…வாங்க..’ என்று அழைத்துச் சென்றார்!

                அங்கே…

                 ஓசைசெல்லாவும் அதியமானும் சீரியஸ் டிஸ்கஷனில் இருந்தனர்…

                  லக்கியாரின் போனில் பாலா வந்தார். வழக்கப்படி வழியைத்தவறவிட்டுவிட்டதாக புலம்பல்!ஆழியூரானும் அவரோடு அகப்பட்டுக்கொண்டார்…லக்கியாரும் அதியமானும் மீட்புப்படையாக அவரைத் தேடிச் சென்றனர்…

                ம்மாட்டிக்கிட்டோம்னு பயந்துகொண்டே செல்லாவைப் பார்த்தேன்…

                நல்ல வேளை! ஓசையின் போன் ஓசையிட்டது.

                போனில் பேசிய செல்லா என்னிடம் “உங்களுக்கு ராசி ஏழுமலையைத்தெரியுமா” என்றார். “தெரியாதே” என்றேன்.

                 சரி! காசி ஆறுமுகம் பேசுறார், பேசுங்க என்றார்.”எனக்கு செல்போனில் பேசமுடியாதே” என்றேன்.

                பிறகு காசி ஆறுமுகம் பேசுவதை செல்லா கேட்டு என்னிடம் சொல்ல நான் அவரிடம் நேரிடையாக பதில் சொல்ல……இப்படி சில நிமிடங்கள்…

                மா.சிவகுமாரும், வினையூக்கியும் வந்து சேர்ந்தனர்..

                மீட்பு அணியும் பாலபாரதியையும் ஆழியூரானையும் அழைத்து வந்தது..

                சூடான விவாதங்கள் தொடங்கின. விவாதிக்கப்பட்ட தலைப்புகள்:-

                தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டியதன் அவசியம்;

                குஜராத் தேர்தல் முடிவு;

                டெக்னிகல் விஷயங்கள் பல(எனக்குப் புரியாது…விட்டுவிட்டேன்)

                 விவாதத்திற்கு நடு நடுவே கிடைத்தவை:-                 சூடான கடலை(சாப்பிடும் கடலை)

                  சூடான பஜ்ஜியும் பொதினா சட்னியும்

                 போளி

                  கைமுறுக்கு

                  சுக்குக்காபி.

                  ஒருவர் போண்டா இல்லையா என்றார்! போளி இருப்பதால் போண்டா இல்லை என்றார் மற்றொருவர்!

                 9 மணி ரயிலைப்பிடிக்க 8-20 க்கு ஓசை செல்லா கிளம்பினார். மற்றவர்கள் 8-45 வரையில் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்!

                 சொல்ல மறந்த செய்தி:- ஆழியூரான் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார்!

                  தருமமிகு சென்னை அவரை வரவேற்கின்றது!

Read Full Post »

இன்று

புதுச்சேரியில்

நடைபெறவிருக்கும்

வலைப்பதிவர் பட்டறை

வெற்றிபெற

வாழ்த்துகின்றேன்!

Read Full Post »