பதிவர் பட்டறை நடைபெறவிருக்கும் தமிழ்த்துறை அரங்கிற்கு எப்படி வருவது?
மாநிலக் கல்லூரிக்கும் விவேகானந்தர் இல்லத்திற்கும் நடுவில் மெரினா வளாகம் உள்ளது.
பறக்கும் ரயிலில் வருவோர் திருவல்லிக்கேணி புகைவண்டி நிலையத்தில் இறங்கவும்.
பேருந்தில் வருவோர் கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கி விவேகானந்தர் இல்லம் இருக்கும் திசையில் நடக்கவும்.
வாடகை வாகனங்களில் வருவோர் பல்கலைகழக விருந்தினர் விடுதி என்று தெளிவாக இடத்தைக் குறிப்பிடவும். (இல்லாவிடில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதிக்கு இட்டுச்செல்லக் கூடும்)
மெரினா திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறம்தான் பட்டறை நடைபெறும் அரங்கம் உள்ளது. மெரினா திருவள்ளுவர் சிலை என்பதை மறவாதீர். ஏனெனில் மைலாப்பூரிலும் திருவள்ளுவர் சிலை உள்ளது!
பதிவர் பட்டறை உங்களை வரவேற்பதில் பெருமை அடைகின்றது!
Thank you Sir.
மிக்க நன்றி ஐயா..
பட்டறை வேலைகளின் நடுவே நன்றி பின்னூட்டம்
மிகவும் நன்றி வினையூக்கி அவர்களே!