Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூலை, 2007 க்கான தொகுப்பு

தல பாலபாரதியின் டி.வி நிகழ்ச்சிய யாருக்கும் சொல்லலே;அதாலே
பார்க்க/கேட்க முடியலே னு மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க;கண்ணீர் ஆறா
ஓடுது……..தலயும் தேம்பிகிட்டுதான் இருக்கார்! ஏன்னா அவர் நிகழ்ச்சி
விபரத்தெ ரெண்டு பேர்ட்ட மட்டும்தான் சொன்னார்!(ரகசியமாம்!….ஏன்னா பா.க.ச
ஆளுங்க அங்கும் வந்திடுவாங்களாம்)
ஆனால், அவங்க ரெண்டு பேருமே நிகழ்ச்சிய பார்க்கல்லே;
பகிஷ்கரிச்சுட்டாங்க!
[...]

முழு பதிவையும் வாசிக்க »

           என் எட்டில் மீதமுள்ள நான்கு இங்கே:
          5). எம்.ஏ
 முதல் ஆண்டில் படிக்கும் பொழுது, விடுதி அறையில் மூவர் இருந்தோம். மூவருக்கும் அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. ஒரு நண்பருக்குப் போதிய வருகைப்பதிவு இல்லையென்பதால் முதல் ஆண்டிலேயே நிறுத்தப் பட்டார்.(ரூமிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் விட்டுடுவாங்களா?) புத்திசாலித்தனமாக அடுத்த ஆண்டில் அவர் பி.எட்(B.Ed) வகுப்பிற்கு மாறி படிப்பைத்தொடர்ந்தார்;பின்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனார். எம்.ஏ இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நான் துணைப்பேராசிரியராகப் பணியேற்றேன். சுமாரான மதிப்பெண்கள் பெற்ற [...]

முழு பதிவையும் வாசிக்க »

           ஆறு ஆட்டத்திற்கு துளசி ட்டீச்சர் அழைப்பு விட்டாங்க; தலைமறைவு ஆயிட்டோம்ல! இப்போ எட்டு போடச்சொல்லி ட்டிபிஆர் ஜோஸப்பும் வினையூக்கியும் அழைக்கிறாங்க! அவர்கள் மூவருக்கும், இப்ப என் பதிவைப் படிக்க இருப்போர்க்கும் இப்போதே நன்றி சொல்லிடறேன்.
                   1).எங்க ஊரில்(ஊர் என்ன பெரிய ஊர்?என்பதே வீடுகள்) முதன் முதலில் (அப்பொழுதைய) எஸ்.எஸ்.எல்.சியில் தேர்ச்சி பெற்றவன் நாந்தான். அதனால் கல்லூரியில் எப்படி சேர்வது, என்ன பாடம் எடுப்பது என்பதெற்கெல்லாம் வழிகாட்டுதல் இல்லை.அதுவரையில் தமிழ்வழியில் படித்தவன்.எப்படியோ, நானே முயன்று கல்லூரியில் சேர்ந்தேன்…..பிற்காலத்தில் [...]

முழு பதிவையும் வாசிக்க »